வான்வெளியில் உள்ள நட்சத்திரங்களை காணுங்கள்! ஜோதிடத்தில் நட்சத்திர கூட்டங்களை ஒருங்கினைத்து ராசி மண்டலங்களாக பிரித்து வைத்துள்ளனர். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருப்பதை வைத்து 30/31 நாட்கள் ராசிகளில் பெயர்ச்சியாகிறது என்று கணக்கிட்டுள்ளனர்,30/31 நாட்கள் 1 மாதமாகவும், 12 ராசி மண்டலங்களை கடப்பதால் 12 மாதங்களை 1 வருடமாகவும் கணக்கிட்டுள்ளனர். சூரியன் பூமியிடமிருந்து நெருங்கி இருக்கும் காலத்தை(அதாவது நன்றாக விண்ணில் தெரியும்) வருடத்தின் தொடக்கமாக அதாவது புதுவருடமாக(புதிய ஆண்டு/வருடம்) கருதப்படுகிறது.
வருடத்தின் தொடக்கம் சூரியன் முதல் ராசி மண்டலமான மேஷத்தை கால புருஷ தத்துவத்தில் முதல் விடாகவும், ரிஷபத்தை இரண்டாம் வீடு, மிதுனம் 3ம் வீடு, கடகம் 4ம் வீடு, சிம்மம் 5ம் வீடு, கன்னி 6ம் வீடு, துலாம் 7ம் வீடு, விருச்சகம் 8ம் வீடு, தனுசு 9ம் வீடு, மகரம் 10ம் வீடு, கும்பம் 11ம் வீடு, மீனம் 12ம் பாவமாக வகுக்கப்பட்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி, லக்னம் என்பது ‘உயிர்’ என்றால், இரண்டாம் வீடு என்பது அந்த உயிர் வாழ்வதற்குத் தேவையான ‘உணவு மற்றும் உடைமை’ ஆகும். இரண்டாம் வீடூ ரிஷப ராசியைக் குறிக்கும். இரண்டாம் வீடு ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவன் இந்த உலகில் நிலைபெறத் தேவையான அடிப்படை வளங்களையும் குறிக்கும் மிக முக்கியமான இடமாகும். இரண்டாம் வீட்டின் முதன்மையான பொறுப்பு செல்வம். கையில் இருக்கும் ரொக்கப் பணம், தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மற்றும் வங்கிச் சேமிப்பைக் குறிக்கும். ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு சொத்துக்களைச் சேர்ப்பார் என்பதை இந்த வீடே தீர்மானிக்கிறது.
ஒருவரின் லக்ணம் உயிராகும், உடல் தகுதி, தன்மை ஆகியவற்றை குறிக்கும். சுயமாக இயங்கும் 1ம் பாவத்திற்க்கு துணை வேண்டுமானால் அதன் 7ம் இடத்தின் உதவியை நாடும். 7ம் வீடு என்பது திருமண உறவு, கூட்டுத் தொழில், கூட்டாளிகளை குறிக்கும். கால புருஷ தத்துவத்தில் 7ம் வீடு துலாமாக வரும், அதன் குறியீடு தராசு.
துலாமின் சின்னம் தராசு.
இந்த குறியீடு மூலம் நாம் என்ன அறியலாம் என்றால், 7ம் இடத்து கூட்டாளிக்கு வேண்டியதை அந்த தராசில் நாம் வைத்தால், அதற்க்கு ஈடாக நமக்கு வேண்டியதை கூட்டாளி நமக்கு தருவார். ஒரு வீட்டின் தேவையை பூர்த்தி செய்ய அதன் நேர் எதிர் வீடான 7ம் இடத்தில் உள்ள வீடு குறிக்கும் காரகத்துவங்களை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு ஆணுக்கு வாழ்க்கை துணை வேண்டுமானால், ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து, அந்த ஆணின் ஜாதகத்தில் 7ம் இடம் குறிக்கும் காரகத்துவமான திருமணத்தை செய்ய வேண்டும். கீழே ராசி வட்டத்தில் 1ம் வீடும் அதற்க்கான 7ம் வீடும் வரையப்பட்டுள்ளன. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மேஷ விட்டின் தேவைக்கு, துலாம் விட்டின் உதவியை/துணையை நாடி அதன் தராசில் துலாத்திற்க்கு வேண்டியதை கொடுக்க வேண்டும், பதிலுக்கு துலாம் மேஷ வீட்டிற்க்கு தேவையானதை கொடுக்கும் (கிவ் அண்ட் டேக் பாலிசி!).
கால புருஷ தத்துவத்தில் இரண்டாம் வீடு என்பது ரிஷபம் (எ) Taurus.
ஆக, ஒரு பாவத்திற்க்கு துணை அல்லது கூட்டாளி மூலம் ஆதாயம் வேண்டுமென்றால் அந்த பாவத்திலிருந்து 7ம் வீடு குறிக்கும் செயலை செய்ய வேண்டும்( தராசில் நாம் வைக்க வேண்டியதை வைக்க வேண்டும்). அதன்படி, 2ம் விட்டிற்க்குறிய உணவு, பணம், தங்கம் மற்றும் அனைத்துச் செல்வங்களை சேர்க்க உதவி தேவையென்றால் அந்த 2ம் பாவத்திலிருந்து 7வது இடமாக வரும் 8ம் வீடு குறிக்கும் செயலை செய்ய வேண்டும். கிழே உள்ள படத்தில் 2ம் வீடும் அதற்க்கான கூட்டாளி(7வது இடம்) 8ம் வீடும் வரையப்பட்டுள்ளது.
2ம் பாவத்திற்க்கு உதவி தேவையென்றால் அதற்க்கு எதிரே உள்ள 8ம் வீடு குறிக்கும் செயலை செய்ய வேண்டும்.
8ம் வீட்டு காரகத்துவங்கள் என்னென்ன?
ஆயுள், மரணம், ரகசியங்கள், மாற்றம், பிறரின் சொத்து/பணம், மந்திர தாந்திரீகம், திடீர் நிகழ்வுகள். இதில் சொல்லப்படாதது ஒன்று உள்ளது. அது தான்,
கொலை ஐ மீன் MURDER !
இரண்டாம் இடம் குறிக்கும் உணவுக்கு நாம் என்ன செய்வோம்? செடி கொடியோ, விலங்குகளோ( சைவமோ, அசைவமோ) ஏதோ ஒன்றை கொன்று அது சேமித்து வைத்திருந்ததை உணவாக உண்போம் (கொன்றால் பாவம், தின்றால் போச்சு!). கீழே இருக்கும் தாவர பாகங்களை பாருங்கள், அவைகளுடைய தாய் தந்தை வெயிலில் கஷ்டப்பட்டு, துண்பப்பட்டு, துயரப்பட்டு இவைகளை பெற்று வளர்த்திருப்பார்கள், ஆனால் இந்த வீகன்/சைவர்களோ அவைகளை கொன்று வேகவைத்து தின்கிறார்களே, ஐயகோ..
ஆக இரண்டாம் வீட்டின் தேவையை பூர்த்தி செய்ய, அதனுடைய 7வது இடத்தில் உள்ள 8ம் பாவத்திற்க்குறிய செயலான கொலையை செய்ய வேண்டும்.
உலகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், கார்பொரேட்கள், ரகசிய குழுக்கள் தங்களுடைய 2ம் விட்டிற்க்குறிய உணவு, பணம், தங்கம் மற்றும் அனைத்துச் செல்வங்களை சேர்க்க உதவி தேவைப்படுவதால், கால புருஷ தத்துவத்தில் 2ம் வீட்டைக் குறிக்கும் ரிஷபம் எனும் காளை மாட்டின் சிலைக்கு முன்பு பலி கொடுக்கின்றனர் (8ம் வீடு குறிக்கும் செயலான கொலை செய்தல்). பாஅல்/மோலாக் உருவச்சிலை ஏன் ஒரு காளை மாடு போன்று உள்ளது என்று இப்போது புரிகிறதா? பாஃபோமெட்டின் தலை ஏன் ரிஷப ராசியில் இருக்கும் மிருகசீரிட நட்சத்திர சின்னமான ஆட்டின் தலை போல் உள்ளது என்று புரிகிறதா?
காலபுருஷ தத்துவத்தில் 2ம் இடமான ரிஷபத்தை சிலையாக செய்து அதன் முன்னே 8ம் வீடான விருச்சிகத்தை குறிக்கும் செயலான கொலையை செய்வது தான் பலி சடங்காகும். விருச்சகத்துக்கு தேவையான மரணம்/கொலையை அதன் தராசில் வைத்தால், பதிலுக்கு அதன் 7ம் இடமான ரிஷபத்திற்க்கு தேவையான உணவு, பொருள், செல்வம் கிடைக்கும்.
ஆஹா, நமக்கு உணவு, பணம், செல்வம் தேவையென்றால் கொலை செய்ய வேண்டுமா? இது தெரியாம போச்சே, அருவாள எடுத்து சீவு சீவுன்னு சீவி தெறிக்க விட்டிருப்போமே!
அதான்ன உங்க மைண்ட் வாய்ஸ்ல ஓடுறது? திருவிளையாடல் தருமிய விட வொர்ஸ்ட் வோய் நீங்களாம்.
அம்புட்டு ஆச!
இரக்கம், கருணை, மனிதாபிமானம்னு எதுவும் பார்க்கிறதில்ல.
ம்ம்ம் ம்ம்ஹூம்ம்ம்!!!
8ம் வீட்டுச் செயலான கொலை செய்தால் 2ம் வீட்டுக்கு உணவு, செல்வம் வரும் தான், அப்போ மற்ற வீடெல்லாம் என்ன டொமேட்டோ தொக்கா, இல்ல டொமேட்டோ தொக்கா என்ன?
இப்படி பலி சடங்குகள் செய்வதால் வரும் பக்கவிளைவுகள் (side effects) குறித்து நாளை சொல்கிறேன்.