என்னைப் பற்றி - about me

தொடக்கமும் வளர்ச்சியும்

வணக்கம்! தி ஜி.டி.ஐ (The GTI) பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனக்கு எப்போதும் வழிகாட்டும் நமது விநாயகரையும், முருகரையும் வணங்கி இந்த தளம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக ஃபேஸ்புக் தளத்தில் ஒரு சராசரி தொடக்கமாக ஆரம்பித்த எனது பயணம், இன்று ஒரு மிகப்பெரிய சமூக அமைப்பாக உருவெடுத்துள்ளது. முக்கிய நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்க்க ஃபேஸ்புக் பெரும் உதவியாக இருந்தது. பல கோடி மக்களை இந்தத் தகவல்கள் சென்றடைந்தன. இந்த அறிவுப் பகிர்வில் என்னுடன் பயணித்த, தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் எனது உயிர் வணக்கங்கள்.


ஏன் இந்த புதிய தளம்?

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சமூக அமைப்பாக நாம் பல வெற்றிகளைச் சாதித்துள்ளோம். நமது செயல்பாடுகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல ஃபேஸ்புக் தளத்தைத் தாண்டி ஒரு பிரத்யேக தளம் தற்பொழுது தேவைப்படுகிறது.

  • சுதந்திரமான செயல்பாடு: ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாற சில கட்டுப்பாடுகளும், குறைவான சுதந்திரமுமே உள்ளது.
  • துல்லியமான அணுகுமுறை: சில நுட்பமான செய்திகளைச் சரியான திட்டமிடலோடு கொண்டு சேர்க்க ஒரு பிரத்யேக தளம் அவசியம்.
  • புதிய அம்சங்கள்: இந்த இணையதளம் மென்மேலும் மாற்றமடையும், உங்கள் தேவைகளுக்கேற்பப் புதிய தொழில்நுட்ப வசதிகள் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும்.


தி ஜி.டி.ஐ (The GTI) என்றால் என்ன?

The GTI என்பதன் விரிவாக்கம் The General Technical Information (பொது நுட்ப தகவல்கள்) என்பதாகும்.

அரசியல், ஜோதிடம், கணினி, இயந்திரம், வாகனம், வணிகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளைப் பற்றிய மிக நுட்பமான செய்திகளையும், தரவுகளையும் (Data) நமது சமூக அமைப்பிற்குப் பயன்படும் வகையில் அறிவியல் பூர்வமாகப் பகிர்வதே இந்தத் தளத்தின் முதன்மை நோக்கம்.


நமது சின்னம்: மெடிச்சி லயன் (Medici Lion)

இணையதளத்தின் தலைப்புப் பகுதியில் நீங்கள் காண்பது, ஒரு சிங்கம் தனது முன்னங்காலால் ஒரு கோளத்தை (Sphere) பற்றியிருக்கும் காட்சி. இது ‘மெடிச்சி லயன்’ என்று அழைக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சிறப்பு உள்ளது. இத்தாலியின் புளோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த மெடிச்சி குடும்பத்தினர், கலை மற்றும் இலக்கியமே மனிதகுலத்தை அடுத்த கட்டப் பரிணாமத்திற்கு (Evolution) கொண்டு செல்லும் என்று நம்பினர்.

அவர்கள் மைக்கலேஞ்சலோ, லியோனார்டோ டா வின்ச்சி போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைப் போற்றி ஆதரித்தனர். மனிதகுலத்தின் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சின்னம், நமது தளத்திலும் ஒரு நோக்கத்தோடு வைக்கப்பட்டுள்ளது: தகவல்கள் மற்றும் கலைகள் மூலம் நமது சமூகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவது.


நோக்கமும் செயல்பாடும்

கடந்த 8 ஆண்டுகளாக ஃபேஸ்புக்கில் நீங்கள் கண்ட அதே நேர்மையும், வேகமும் இந்தத் தளத்திலும் தொடரும். தொழில்நுட்ப ரீதியாக நாம் இன்னும் வலுவடைவோம். நமது சமூக அமைப்பு இந்தத் தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வணக்கம், மீண்டும் வருக!


Built with Modern Technology for the Community