கவலை வேண்டாமா?



பாஃபோமெட்டை பார்த்து கவலைப்பட வேண்டுமா?
ஆம், கவலைகொள்ள வேண்டும்.

ஏன் கவலைப்பட வேண்டுமென்றால், பாஃபோமெட்டின் தலை அப்படி!

பாஃபோமெட்டின் தலை ஒரு ஆட்டின் தலை போன்று இருக்கும், அந்த குறியீடு மிருகசீரடத்தின் குறியீடு ஆகும். மிருகசீரிடம் தீய சக்திகளை ஈர்க்கும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

இணைப்பு : 666 மிருகசீரிடம்

ஜோதிடத்தில் தலை தான் லக்கினம் என்று குறிக்கப்படுகிறது. லக்கினம் தான் ஒருவரின் உயிருக்கு காரகத்துவமாக அமையும். பாஃபோமெட் எனும் உருவத்தில் தலைப்பகுதியில் மிருகசீரிடத்தின் சின்னமான ஆட்டின் தலை வைத்திருப்பதால், இந்த உருவம் தீய சக்திகளை தான் ஈர்க்கும். அதனால், நீங்கள் இந்த வரைபடத்தை பார்த்து கவலைப்பட வேண்டும்!

இது வெறும் படம் தானே என்று நீங்கள் கேட்டால். ஆம், அது வெறும் படம் தான், ஆனால் இயற்கை விதி ஒன்று இருக்கிறது, உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே, என்பது தான் அந்த விதி. காகிதமோ, கணினி திரையோ எப்படி இந்த விதிக்கு உடன்படும்? உதாரணமாக ஒரு FM ரேடியோவை எடுத்துகொள்வோம். ஒருவர் பேசும் வார்த்தைகள் மின் சமிக்ஞைகளாக மாற்றி காற்றில் அலைவரிசையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த அலைவரிசை அலுமினியம், செம்பு, பித்தளை பொருட்கள் கிரகிக்கிறது, பின்பு மீண்டும் மின் சமிக்ஞைகளாக மாற்றி ஸ்பீக்கரில் பேசும் வார்த்தை வருகிறது. ஆக, FM அலைவரிசைகளை(ஆற்றல்) அலுமினியம், செம்பு ஈர்ப்பது போல, எந்த ஒரு பொருளும் இயற்கையில் ஆற்றலை(உயிர்/ஆன்மா) ஈர்க்கும். தீய சக்திகளை ஈர்க்க சாங்கியங்கள் செய்யவே இந்த உருவம் வரையப்பட்டுள்ளது.

மிருகசீரிட நடச்சத்திரம் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும் மீதமுள்ள இரண்டு பாதங்கள் மிதுனத்திலும் இருக்கும். மிதுனம் இரட்டை தன்மையுள்ள ராசியாகும், அதன் புதன் ஒரு அலிக் கிரகம் ஆகும்(ஆணும் பெண்ணும் இணைந்த அமைப்பு). அதனால், தான் பாஃபோமெட்டின் தலை ஆட்டு தலையாகவும், உடல் ஆண்(கை, தோள்பட்டை) பெண்(மார்பு) உடல் பாகங்கள் இணைந்ததாகவும் வரையப்பட்டுள்ளது.

இந்த பாஃபோமெட் வரைபடத்தினால் என்ன பயன்? ஏன் இந்த படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ பலி கொடுக்கின்றனர்? போன்ற கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கிறேன்.

அப்புறம் ஒரு விஷயம்: பாஃபோமெட் தலைபகுதி ரிஷபத்தில் உள்ளது, ரிஷபம் குறிக்கும் காளை போன்றே இன்னொன்றும் உள்ளது அது தான் பாஅல் மோலாக் (Baal moloch). பாஃபோமெட்டோடு அதற்க்கும் பலி கொடுக்கிறார்கள், ஏன்?

ரிஷப(மிருகசீரிடம்) ஆட்டு தலை, ரிஷபத்தை குறிக்கும் காளை மாடு

பாஃபோமெட்
பாஅல் / மோலாக்