பிசாசின் உருவம் The Devil's Image

பிசாசு @ Baphomet

முக்கிய குறிப்பு: பைபிளில் பிசாசின் உருவத்தை தெளிவாக கூறப்படவில்லை.

பின்பு பாஃபோமேட்(Baphomet) உருவமும் பெயரும் எங்கிருந்து கிடைத்தது? பாஃபோமேத்(Baphomet) எனும் பெயர் முதன் முதலில் காதால் கேட்டது முதலாம் சிலுவை போரில் தான்(First Crusade war). ஜெருசலேத்தை பிடிக்கும் வழியில் இருந்தது தான் ஆண்டியாக்(தற்போது துருக்கி நாட்டில் உள்ளது) எனும் நகரம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆன்செல்ம் ஆஃப் ரைப்மாண்ட் என்பவர் முதலாம் சிலுவை போரில் பங்கேற்றார். அவர் போரில் தான் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாக எழுதி இரண்டாம் மனசேசஸ் எனும் கிருஸ்துவ பேராயரிடம் கடிதங்கள் அனுப்பினார்.

1098ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் எழுதிய கடிதத்தில் எழுதியது ✍️

“As the next day dawned, they [i.e. the inhabitants of Antioch] called loudly upon Baphometh; and we prayed silently in our hearts to God, then we attacked and forced all of them outside the city walls.[6]”

தமிழில்:

“அடுத்த நாள் விடியும்போது, அவர்கள் [அதாவது அந்தியோக்கியாவின் குடியினர்] ‘பாஃபோமேத்’ என்று உரக்கக் கூப்பிட்டார்கள்; ஆனால் நாங்கள் எங்கள் இதயங்களில் அமைதியாக கடவுளை நோக்கி ஜெபித்தோம்; பின்னர் நாம் தாக்கி, அவர்களை எல்லாரையும் நகரின் சுவர்களுக்கு வெளியே துரத்தியோம்.”

பாஃபோமேத் எனும் பெயரை முதன் முதலில் கேட்டது ஜெருசலேம் செல்லும் வழியில் ஆண்டியாக் எனும் நகரத்தில் தான்.

மீண்டும் சொல்கிறேன், பாஃபோமேத் எனும் சொல்லை முதலில் காதால் கேட்டது முதலாம் சிலுவை போரில்!

பிறகு 200 வருடங்கள் பின்னர்:

டெம்ப்ளர் வழக்குகள் (Templar Trials)

டெம்ப்ளர் வழக்குகள் (Templar Trials) என்பது நடுத்தர காலத்தில் நடந்த முக்கியமான சம்பவமாகும். Knights Templar என்ற அமைப்பு 12–13ஆம் நூற்றாண்டுகளில் செயல்பட்ட கிறிஸ்தவ போர்வீரர் குழுவாக இருந்தது. ஆனால் 1307ஆம் ஆண்டு Philip IV of France அவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் இந்த அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்கு எதிராக மதவிரோதம், “Baphomet” பாஃபோமேத் எனப்படும் சிலையை வழிபட்டது, மற்றும் ரகசிய சடங்குகள் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள பல உறுப்பினர்கள் வேதனைப்படுத்தப்பட்டு (torture) கட்டாயப்படுத்தப்பட்டனர். இறுதியில், இந்த வழக்குகளின் விளைவாக டெம்ப்ளர் அமைப்பு முற்றிலும் கலைக்கப்பட்டது.

1800கள்

எலிஃபாஸ் லெவி (Éliphas Lévi)

எலிஃபாஸ் லெவி (Éliphas Lévi) என்பவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மறைஞான சிந்தனையாளர் மற்றும் 33 டிகிரி ஃப்ரீ மேசன். அவருக்கு குறிப்பாக Kabbalah (யூத/ஷானான் மறைஞானம்) மீது அதிக ஆர்வம் இருந்தது. இந்தக் கபாலா மற்றும் அல்கெமி போன்ற கருத்துகளின் தாக்கத்தில், அவர் “Baphomet” என்ற உருவத்தை ஆட்டுத்தலை கொண்ட சின்னமாக தனது புத்தகத்தில் வரைந்தார். அவர் அதை ஒரு தீய தெய்வமாக அல்லாமல், மனிதனில் உள்ள எதிர்மறை-நேர்மறை தன்மைகள், உடல்-ஆன்மா, அறிவு-ஆசை போன்ற இரட்டை அம்சங்களின் சமநிலையை காட்டும் ஒரு தத்துவச் சின்னமாகவே விளக்கினார். ஆனால் பின்னர் மக்கள் அதை தவறாக புரிந்து, “சாத்தான்” போன்ற உருவமாக எடுத்துக்கொண்டனர்.

பாஃபோமேட் Baphomet

2026

இந்த பாஃபோமெட் ஏதோ ஒருவர் எதற்க்காகவோ வரைந்தார் என்று விட்டுச்சென்றிருக்கலாமே? ஏன் ரகசிய குழுக்கள், பெரிய நிறுவனங்கள், உலக அரசியல்வாதிகள் இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

பாஃபோமெட்டின் முக்கியத்துவம் ஏன் என்று பார்க்கலாம் வாருங்கள்! எலிஃபாஸ் வரைந்த பாஃபோமெட்டின் உருவப் படத்தை வைத்து அதில் குறிக்கப்பட்டுள்ள மறைமுக சின்னங்களை பார்ப்போம்.

பாஃபோமேட் நட்சத்திரங்கள் Baphomet stars
  1. பாஃபோமெட்டின் தலைக்கு மேல் உச்சியில் இருப்பது ஒரு தீச் சுவாலை, இந்த தீச் சுவாலை சின்னமானது ஜோதிடத்தில் கார்த்திகை(மேஷ ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  2. பாஃபோமெட்டின் முகம் ஒரு ஆட்டின் முகத்தை போன்று உள்ளது, இந்த ஆட்டு தலை சின்னமானது ஜோதிடத்தில் மிருகசீரிட(ரிஷப + மிதுனம் ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  3. பாஃபோமெட்டின் மார்பகம் ஒரு பெண்ணின் உடலை போன்று வைக்கப்பட்டுள்ளது, இந்த பெண் மார்பக சின்னம் ஜோதிடத்தில் பூசம்(கடகம் ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  4. பாஃபோமெட்டின் இடை பகுதியில் பின்னிக்கொண்டிருக்கும் பாம்பும், முதுகின் பின்னே சிறகுகளும் இருக்கின்றன, இந்த பின்னிக்கொண்டிருக்கும் பாம்பும், சிறகுகள் சின்னமானது ஜோதிடத்தில் ஆயில்ய(கடக ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  5. பாஃபோமெட்டின் தொடை பகுதியில் ஒரு மெத்தை போன்று உருவகம் செய்யப்பட்டுள்ளது, இந்த மெத்தை சின்னமானது ஜோதிடத்தில் உத்திரம்(சிம்மம்+கன்னி ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  6. பாஃபோமெட்டின் கால்கள் ஒரு ஆட்டின் கால்கள் போன்று உள்ளது, இந்த ஆட்டின் கால்கள் சின்னமானது ஜோதிடத்தில் முரம் போன்ற தோற்றம் கொண்ட உத்திராடம் (தனுசு+மகர ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  7. பாஃபோமெட்டின் ஒரு உருளையின் மீது அமர்ந்திருப்பது போல் உள்ளது, இந்த உருளை சின்னமானது ஜோதிடத்தில் சதயம்(கும்ப ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

  8. பாஃபோமெட் கைகள் காட்டும் இடத்தில் இரண்டு பிறைகள் உள்ளன, இந்த பிறைகள் போன்று தோற்றமளிக்கும் சின்னமானது ஜோதிடத்தில் உத்திரட்டாதி(மீன ராசி மண்டலம்) நட்சத்திரத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.

12 ராசி மண்டலத்தில் துலாம், விருச்சிகம் ராசிகளை தவிர மற்ற எல்லா மண்டல நட்சத்திரங்களை கொண்டு இந்த உருவகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏன் துலாம், விருச்சிகம் உருவகப்படுத்தவில்லை என்று கேட்டீர்களென்றால், வான சாஸ்திரத்தில் துலாம், விருச்சிகம் இரண்டும் மறைவு ஸ்தானங்களை குறிக்கும் (பாஃபோமெட்டின் பிறப்புறுப்பு மற்றும் பட்டெக்ஸ்) அதையெல்லாம் உருவகப்படுத்த வேண்டுமென்றால் பாஃபோமெட்டை வேறுமாதிரி தான் அமர வைக்க வேண்டும்.

ஒரு மாறுபட்ட கலவையாக ஏன் இந்த பாஃபோமெட்டை உருவகப்படுத்த வேண்டும்? ஏன் ஒரு சில நட்சத்திரங்களின் குறியீடுகளை தனித்தனியே தேர்ந்தெடுத்து உடற் பாகங்களை உருவகப்படுத்த வேண்டும்?

பாஃபோமெட் என்பது ஒரு தெய்வமோ அல்லது ஆன்மாவோ அல்ல. அது தேர்ந்தெடுக்கப்பட்ட நட்சத்திர சின்னங்களை ஒருங்கே அமைத்து சாங்கியம் செய்வதற்க்காக உருவாக்கப்பட்ட ஒரு நட்சத்திர வரைபடம்.

ஓ, அப்போ வெறும் நட்சத்திர அடையாளங்கள் மட்டும் தான் பாஃபோமெட்டா? அதை பற்றி கவலை படவேண்டாமா? என்று நீங்கள் கேட்டால். இல்லை, கவலை பட வேண்டும் என்று தான் சொல்வேன்.

ஏன் கவலை பட வேண்டும்? எதற்க்காக இந்த நட்சத்திர வரைபடம் என்ற உங்கள் கேள்விகளுக்கு? பதில் நாளை சொல்கிறேன்.