பாஆல் அர்த்தம் மற்றும் எஸ்டீடி:
பாஆல் (அ) Baal என்பது பண்டைய செமித்திய(semitic) மொழிகளான எபிரேயம் (Hebrew) மற்றும் போனீசியன் (Phoenician) மொழிகளில் இருந்து உருவானது.
பொருள்: செமித்திய(semitic) மொழிகளில் இதன் அடிப்படைப் பொருள் “தலைவர்,” “உரிமையாளர்,” அல்லது “கணவர்” என்பதாகும்.வேர்ச்சொல்: இது ‘பாஆல்’ (Ba‘l) என்ற சொல்லிலிருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தின் அல்லது இயற்கை சக்தியின் அதிபதியை இது குறிக்கிறது.
தோற்றம் (Origin)- ஷானானியர் கலாச்சாரம்: மத்திய கிழக்கில் வாழ்ந்த ஷானானியர்கள் (Canaanites), வானிலை மற்றும் மழையின் கடவுளான ‘ஹதாத்’ (Hadad) என்பவரை ‘பாஆல்’ என்று அழைத்தனர். இது செழிப்பிற்கும் விவசாயத்திற்கும் உரிய தெய்வமாகப் போற்றப்பட்டது. பிற்காலத்தில், யூத மற்றும் கிறிஸ்தவ விவிலிய நூல்களில் இது ஒரு மாற்றுத் தெய்வமாக (False God) சித்தரிக்கப்பட்டது. பண்டைய தமிழகத்திற்கும் போனீசியர்களுக்கும் (Phoenicians) இடையே கடல் வணிகத் தொடர்பு இருந்தது. இருப்பினும், ‘பாஆல்’ என்ற பெயர் தமிழில் வழிபாட்டு ரீதியாகப் பயன்படுத்தப்படவில்லை.
மொழிபெயர்ப்பு: நவீன தமிழ் விவிலியத்தில் இது பாஆல் என்றே அழைக்கப்படுகிறது.
ஒப்பீடு: தமிழ் மரபில் ‘பாஆல்’ என்பது ஒரு நிலத்தின் தலைவன் அல்லது ‘இறைவன்’ (Lord) என்ற பொதுவான பொருளுக்கு இணையானது.
கண்ணாடி Mirror
உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களிலும் கண்ணாடி மிக முக்கியமானது. இயற்கையில் எரிமலைக் குழம்பிலிருந்து உருவான அப்சிடியன் கற்களில் தொடங்கி, மெசொப்பொத்தேமியா மற்றும் எகிப்திய நாகரிகங்களில் மணலை உருக்கிச் செய்யும் கலையாகக் கண்ணாடி பரிணமித்தது. ரோமானியர்களின் கண்ணாடி ஊதும் முறையும், வெனிஸ் நகரத்தின் நேர்த்தியான கலைத்திறனும் இதனை உலகெங்கும் கொண்டு சேர்த்தன; தமிழகத்தைப் பொறுத்தவரை, சங்க காலம் முதலே யவனர்களுடனான வணிகம் மற்றும் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி சான்றுகள் மூலம் கண்ணாடியின் பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, அறிவியல் லென்ஸ்கள் மற்றும் அதிவேக இணையத் தொடர்பு (Optical Fiber) என மனித நாகரிகத்தின் நவீன முன்னேற்றத்திற்கு கண்ணாடி ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.
நம் நினைப்பில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உலகின் முன் நாம் எப்படி தோன்றுகிறோம் என்று காட்டுவது தான் கண்ணாடி. கண்ணாடி பிம்பத்தைச் செங்குத்தாக மாற்றாமல் நேராகவே (Upright) காட்டும்; ஆனால், பக்கவாட்டில் இடதுபுறத்தை வலதுபுறமாகவும், வலதுபுறத்தை இடதுபுறமாகவும் திருப்பி (Lateral Inversion) காட்டும்.
எடுத்துக்காட்டாக: AMBULANCE என்பது கீழே இருப்பது போல கண்ணாடி காட்டும்
AMBULANCE
மந்திர தந்திரங்களில், உலகில் உள்ள அனைத்து வழிபாடுகளிலும் கண்ணாடி மிக மிக மிக மிக மிக முக்கியமானது. அதற்க்கு காரணம் சொல்ல தேவை வரும்போது சொல்கிறேன்.
சரி இப்போ பாஅல் baal என்ற பெயரை மத்திய கிழக்கு மொழிகளில் படிப்பது போல வலமிருந்து இடது நோக்கி படித்தால் என்ன வரும் தெரியுமா?
பாஅல் <-> லாப்
BAAL <-> LAAB
லாப்(ம்) என்றால் ஆதாயம், இந்தியிலும் LAAB என்றால் லாபம்(ஆதாயம்) என்று பொருள்.
ஓம் லாபம் எங்கிருந்து வந்தது என்று புரிகிறதா?
2ம் வீட்டு ரிஷபத்தின் சின்னமான காலையின் முகமும் அர்த்தமும் மாறாமல் பாஅல்(baal)வைத்திருக்கிறார்கள் புரிகிறதா?
ஜோதிடத்தில் 2ம் வீடு தனம் ஸ்தானம், ஒருவர் எவ்வளவு சேமிக்க முடியும், எவ்வளவு வைத்திருப்பார் என்பதை காட்டும் இடம். 11ம் வீடு என்பது லக்னத்துக்கு லாப ஸ்தானம் என்று பொருள், எவ்வளவு வருமானம் வரும் என்று காட்டும் இடம். லக்னத்துக்கு 10ம் வீடு தொழில் என்பது போல, எந்த ஒரு வீட்டிற்க்கும் அதிலிருந்த 10வதாக வரும் வீடு அதனுடைய தொழில் ஸ்தானம் ஆகும். ஆக, 11ம் வீட்டில் இருந்து 10வதாக இடம் 8ம் வீடு ஆகும்! 8ம் வீடு இயங்கினால் லாபஸ்தாத்தின் 10ம் வீடு இயங்கும், அதே லாப வீட்டின் 10ம் வீடு இயங்கினால் லாபஸ்தானத்தின் 11ம் விடு பாதிக்கும். அதாவது, 8ம் வீடு இயங்கினால் 11ம் வீட்டிற்க்கு 11வதாக வரும் 9ம் இடம் பாதிக்கும். லாபம் வந்தாலும் தீய கர்மாவை கூடவே அழைத்து வரும்.
பால் பால் இது தமிழ் பால் என்று நினைக்காதீர்கள். பாஆல் பாஅல் என்று நினைத்துப்பாருங்கள், அங்கே என்ன தெரிகிறது?
ஆம், லாப், lab என்றால் மத்திய கிழக்கு மொழிகளில் விளையாட்டு(play) என்று அர்த்தம் வரும்!உதாரணமாக உலகமே மயங்கும் foot BAALல் எத்தனை பேர் விளையாடுவார்கள்? ஒரு குழுவுக்கு 11 பேர், அவர்கள் அந்த பந்தை எங்கே சேமிக்க வேண்டும் 2 பேருக்கு பின்னால் இருக்கும் கூடையில்.
11, 2 புரிகிறதா???
கிரிக்கெட்டில் எத்தனை பேர் விளையாடுவார்கள்?
11 பவுலிங், 2 பேட்டிங் புரிகிறதா ???
tennis BAAL எத்தனை பேர் விளையாடுவார்கள்?
2 பேர், புரிகிறதா?
hand BAAL?
2பேர் பின்னால் இருக்கும் கூடையில் பந்தை(BAAL) சேர்க்க 7+7 பேர் போட்டி. hand என்பது கையை குறிக்கும், கையை புதன் குறிக்கும். புதனுக்குறிய எண் 5, 7+7 = 14, 1+4 = 5.
basket BAAL?
குழுவுக்கு 5 பேர், 5+5. அவர்கள் கூடவே நடுவில் சுற்றி திரியும் நடுவர். மொத்தம் 11 பேர். 2 கூடைகள்.
11ம் வீட்டுக்கு தேவையென்றால் எங்கு சென்று உதவியை நாட வேண்டும்? 11ம் வீட்டின் 7ம் கூட்டாளியான 5ம் வீட்டுக்கு சென்று அதன் செயலை செய்ய வேண்டும். 5ம் வீடு குறிக்கும் செயல்கள் என்னென்ன?
ஓவியம் வரைதல், வீடியோ கேம் விளையாடுதல்,போட்டிகள், விளையாட்டுத் துறை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகள், சினிமா பொழுதுபோக்கு.
ஆக, 11ம் வீட்டுக்கு தேவையான லாபத்தை அடைய, 5ம் வீடு குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளில், 11, 2 எண்ணிக்கை வரும் வகையில் போட்டிகளை மக்கள் கண்டால் என்னாகும்? மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை செலவு செய்வார்கள்.
அடப்பாவிகளா, இத மறைக்கிறத்துக்கு தான் 11ன்னா ராவண இந்திரன், 9ன்னா ராமன், 3ன்னா சகுனி, 8ன்னா அவன், 8 3/4 ன்னா இவன் சொல்லிக்கிட்டு திரியுறானுங்களா. இந்த 11, 9 வச்சிகிட்டு இதுங்க காட்டுன படமிருக்கே அடங்கப்பா…. சரி இனிமே என்ன சொல்லப்போகுதுங்களாம்?
சினிமா என்று சொன்னதும் ஒன்று நியாபகத்துக்கு வருகிறது:
பாகுபலி படம் பார்த்தீர்களா?
அதில் போருக்கு போகும் முன்னர் கொற்றவைக்கு ஒரு எருமை/காளை மாட்டை பலி கொடுப்பார்கள். ஏன்?
2ம் வீட்டு காளை மாட்டிற்க்கு 8ம் வீட்டின் பலி கொடுத்தால் பொருளாதாராம் பெருகும். 2ம் வீட்டின் காளையையே பலி கொடுத்தால் என்ன கிடைக்கும்? 8ம் வீட்டிற்க்கு ஆயுள் கிடைக்கும்! போரில் தன் உயிர்(8மிடம் ஆயுள்) காக்கப்பட வேண்டுமென்று கொற்றவைக்கு 2ம் இடமான ரிஷபத்தை குறிக்கும் எருமை/காளையை பலி கொடுக்கிறார்கள். ஆனால் பாகுபலியோ, தான் ஒரு அதி சூர சூப்பர் சுப்பு என்று நினைத்துக்கொண்டு முழுவதுமாக புரிந்துகொள்ளாமல் தன் ரத்தத்தை பலியாக கொற்றவையிடம் கொடுத்தார். கொற்றவையின் தராசில் தன் ஒரு உயிரை முழுவதாக வைக்காமல் வெறும் ரத்ததை மட்டும் வைத்த பாகுபலியின் செயல் ஏமாற்றுவதை போல் தான். அதனால் தான் பாகுபலியும் ஏமாற்றப்பட்டு(காரணம் 2 பெண்கள், ரிஷபத்தின் அதிபதி சுக்ரன் பெண்ணை குறிக்கும். பெண் தெய்வமான கொற்றவைக்கு முழுமையான பலி தரவில்லை!) அரசர் பதவியும் கிடைக்காமல், கட்டப்பாவால்(அதற்க்கும் ஒரு பெண் தான் காரணம்) முதுகில் சொருகப்பட்டு உயிர் துரந்தார். காளையை சரியாக பலி கொடுத்த பல்வால் தேவனோ போரில் வெற்றியும்பெற்று, அரசனாகவும் ஆனார்.
Baahubali -> baah + uh + baal + ee. பண்டைய ஷானான் பகுதி மொழியான ஹீப்ரூவில், இந்த அர்த்தங்களை சேர்த்துப்பார்த்தால் (வலமிருந்து இடதுக்கு படிக்க வேண்டும்), என் மழைக் கடவுள் வந்துவிட்டார் என்று அர்த்தம் வரும்.
இன்னொரு விஷயம் சொல்லட்டுமா?