தொடர் சங்கிலியாகும் வினைகள்

8ம் வீட்டு செயலான பலி சடங்கு(கொலை) செய்தால் என்னாகும்?

1. அடுத்த வீடான 9ம் வீட்டு காரகத்துவங்கள் பாதிக்கும்.
2. 9ம் வீட்டுக்கு திரிகோணங்களான 1,5,9 வீடுகள் பாதிக்கும்.
3. சேமித்த புண்ணியங்கள்ம், தர்மங்கள் பாழாகும்.
4. தந்தைக்கான காரகங்கள் பாதிக்கும்.
5. 5ம் இடம் குழந்தைகள்/சந்ததிகளை பாழாக்கும்.
6. 1ம் இடத்தின் உயிர் காரகத்துவம் பாழாக்கும்.

இதெல்லாம் எதனால்?
  2ம் வீட்டு உணவு, பணம், சொத்துக்களுக்காக 8ம் வீட்டு வினையின் சங்கிலி தொடர்.

🔞

வயது வந்தோருக்கான உள்ளடக்கம்: உங்களுக்கு 18+ வயது நிரம்பியிருந்தால் இங்கே கிளிக் செய்யவும்
எச்சரிக்கை: நீங்கள் வயது வரம்பிற்குட்பட்ட பகுதியை அணுகுகிறீர்கள்.

8ம் வீடு வேறெதெல்லாம் குறிக்கும்?

8ம் வீடு பிறப்புறுப்புகளை, கலவியை, கவர்ச்சியைக் குறிக்கும். கால புருஷ தத்துவத்தில் 7ம் வீடும், 8ம் வீடும் மறைவு ஸ்தானங்கள் ஆகும். அவை கண்களால் காணக் கூடாதவை, ஏனென்றால் வலது கண் 2ம் வீடு மற்றும் இடது கண் 12ம் வீடுகளுக்கானது. கண்கள் ஒன்றை கண்டால் அதற்கு எதிர்வினையாற்ற வைக்கும் அல்லது அந்த வீடுகளின் காரகத்துவங்களைச் செலவு செய்திடும்.

8ம் வீடான கவர்ச்சி, பிறப்புறுப்புகளைக் கண்டால் 2 மற்றும் 12 வீடுகளுக்கான காரகத்துவங்களை இழக்க நேரிடும். 2ம் வீடான செல்வம், பணம், சொத்துகள், 12ம் இடமான தூக்கம், கொடுப்பினை, வெளிநாடு தொடர்புகள் ஆகியவை இழக்க நேரிடும்.

எடுத்துக்காட்டாக: கவர்ச்சி (அ) நிர்வாணத்தைக் காணுமிடத்தில் மனிதன் தனது சேமிப்பான சொத்துகள், பணத்தைச் செலவழிப்பான். இதனால், அவனுக்குத் தூக்கம் கெடும். வெளிநாடு தொடர்புகள் அவனது இந்தச் செய்கைகளைப் பார்த்து அவனுடைய நோக்கங்கள் மற்றும் செயல்திறன் மீது சந்தேகம் கொண்டு தொடர்பை துண்டித்துக் கொள்ளும். அதனால்தான் வெளிநாடுகளில் தனிநபர் ஒழுக்கத்தை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.


இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் கவர்ச்சியை அள்ளி அள்ளி தெளிக்கிறார்களே, ஏன்? ஆம், கவர்ச்சியை காண்பவர்கள் என்ன செய்வார்கள்? தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை நடிகர், நடிகைகளுக்கு செலவு செய்வார்கள். 8ம் இடத்து கவர்ச்சியை காண்பதால், காண்பவரின் 2ம் வீட்டில் கரையும் சேமிப்பானது, கவர்ச்சியை காட்டும் நபரிடம் சென்று சேரும். இதனால் தான் சமீப காலமாக 18+ செயலிகள் அதிகரித்துள்ளன.

கவர்ச்சி நடிகர் நடிகைகளுக்கு செல்வம் எப்படிச் சேர்கிறது என்று இப்போது புரிகிறதா?

வேறென்ன பாதிப்புகள் நடக்கும்?

ஒரு சமூகமே 8ம் இடத்தை செயல்படுத்தினால் என்ன ஆகும்?

அந்த சமூகத்திற்க்கான 9ம் இடம் குறிக்கும் தர்மம், இறைத்தன்மை, ஆன்மீம், அந்த சமூகத்தின் குலதெய்வம் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். 9ம் இடம் பாதிக்கப்பட்டால், சமூகம் நேர்மையின்மை, கொலை, கொள்ளை, திருட்டு, ஏமாற்றுதல், வஞ்சகம், ஃபிராடு, ஃபோர்ஜெரி, கடத்தல், போதை வஸ்து பரவல் என்று சமூகமே சீரழியும் வேலைகள் தான் நடக்கும்!



ஒருவன் கவர்ச்சியையும் காட்டி மக்களின் பணத்தை கரைத்துவிட்டு, சமூகத்தையும் சீரழித்தது போதாதென்று, அரசியல் செய்கிறேன் என்று, 8ம் இடம் குறிக்கும் பலி சடங்கை 10000 பேர் கூடி இருந்த இடத்தில் பேருந்தை உள்ளே நுழைத்து நசுக்கி, 40க்கும் மேற்ப்பட்டோரின் உயிரழப்பை ஏற்படுத்தினானே அவன் யார்? அவனது நோக்கம் என்ன?





தமிழ்நாட்டில் இவ்வளவு அக்கிரமங்களுக்கான காரணம் புரிகிறதா?

8ம் வீட்டு செயல்களால் 9ம் வீடு பாதிப்படைந்து, தர்மம் பாதிக்கப்பட்டு நாட்டில் அதர்மம் தலைவிரித்தாடுகிறது.

நாளை மேலும் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது.