தீப ஆராதனை காட்டும் போது, முதலில் மேலிருந்து கீழே தீபத்தை இறக்குவோம். பிறகு கடிகார சுழற்சியை போல மூன்று முறை தீபத்தை தெய்வத்தின் சிலையோ அல்லது படத்தையோ முன்னால் சுழற்றியும், எதிர் திசையிலும் சுழற்றியும் அந்த தீபத்தை தொட்டு வணங்குவோம்.
ஆராதனை கை வாட்டம்
நாம் தீப ஆராதனை செய்யும் போது, கை போகும் வாட்டத்தை ஒரு எழுதுகோலால் வரைந்தால் இப்படி இருக்கும்.

இந்த கை வாட்டத்தின் பெயர் “ச்சோகுரேய்”, இது ரெய்கி(Reiki) சிகிச்சையின் ஒரு அங்கமாகும். ரெய்கி சிகிச்சை என்பது உயிர் ஆற்றலை சீராக்கும் சிகிச்சையாகும். இந்த சிகிச்சை முறையை ஜப்பானில் ரெய்கி என்றும் சைனாவில் லிங்சீ என்றும் அழைப்பர்.
ஒவ்வொரு நாளும் நமது அன்றாட பணிகளாலும், பல்வேறு சுமைகளாலும் நமது உயிர் ஆற்றல் குறைந்து வலிமை இழக்கிறோம். அதற்கான உயிர் ஆற்றல் சிகிச்சை முறை தான் இந்த ரெய்கி. உலகெங்கிலும் இந்த சிகிச்சை முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரெய்கி சிகிச்சை முறையில் இந்த கை வாட்டங்கள் உடலில் உயிர் ஆற்றலை சீர் செய்கிறது, அதே போல் நமது கோவில்களிலும், குல தெய்வ சிலைகளுக்கு தீப ஆராதனை செய்யும்போது நமது உயிர் ஆற்றல் சீர் செய்யப்படுகிறது.
இது தான் நாம் தீப ஆராதனை செய்யும் காரணம்!
திரு.மிகாஓ உசூயி
ஜப்பானில் இந்த சிகிச்சை முறையை திரு.மிகாஓ உசூயி தொடங்கினார். இவர் 1865ல் பிறந்தார் சமுராய் வம்சாவழியில் பிறந்த இவர் அந்த பராம்பரியத்திலேயே வளர்க்கப்பட்டார்.
கி.பி 1860களுக்கு பிறகு தான் இந்த முறை உருவாக்கப்பட்டது. ஆனால் நம் முன்னோர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறையை நமக்கு கடத்தி, பழக்கப்படுத்தி, கற்பித்து நமக்கு பேருதவி செய்துள்ளனர்.
இந்த உயிர் ஆற்றல் சிகிச்சைமுறை வேலை செய்யுமா? செய்யும்!
ஆதாரத்தை நாளை பார்ப்போம்.