இந்த தளம் இயங்குவதற்க்கு server, domain, plugins, widgets, 3d view ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கான லைசன்ஸ்களுக்கு பொருளாதாரம் தேவைப்படுவதால் இந்த தளத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதற்க்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தளம் இயங்குவதற்க்கு விளம்பரங்கள் அவசியம் ஆதலால், இங்கு வரும் விளம்பரங்களின் குறுக்கீடூகளை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
19:19
Nov 21st
2024
R Stalin
Author
சலோமியாவின் ஆட்டம் சாதாரண ஆட்டமல்ல… பேயாட்டம்…
சலோமியாவின் அட்டம் தொடர்கிறது…
01:11
Nov 18th
2024
R Stalin
Author
TheGTI.XYZ, ஏன்?
தி ஜிடிஐ(The GTI), The General Technical Information, பொதுவாக நமது சமூக கட்டமைப்பை சிஸ்டம்(system) என்று கூறப்படும். அந்த அமைப்பில்(சிஸ்டத்தில்) உள்ள பல்வேறு நுட்பங்களையும், தரவுகளையும் இங்கே பகிரப்படுவதால் இந்த பெயர். இந்த தளம் ஒரே ஒரு குறிப்பிட்ட தலைப்பையோ, நோக்கத்தையோ கொண்டு செயல்படாது. அமைப்பில் உள்ள பல்வேறு காரணிகளின் தரவுகளை கொண்டு அலசி, ஆராய்ந்து செய்திகள் தொகுக்கப்படுவதால், XYZ டாப் லெவல் டொமைன்(top level domain) தேர்ந்தெடுக்கப்பட்டது.
.com - வணிக தொடர்பான தளம்
.org - தொண்டு நிறுவனங்கள் தொடர்பான தளம்
.ai - செயற்க்கை நுண்ணறிவு தொடர்பான தளம்
.xyz - 1960-தற்போது வரை பிறந்தவர்களை குறிக்கும் GenX, GenY, _ GenZ தொடர்பான தளம்
ஏன் பதிவுகள் தாமதம்?
தி ஜிடிஐ(The GTI) தளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து வெகு சமீபமாக தான் உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்க்கான வடிவமைப்பு, தோற்றம், செயல்திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை நிர்மாணிக்க நீண்ட அவகாசம் எடுத்துக்கொண்டது. மேலும் பல புதிய அம்சங்களும், மாற்றங்களும் செய்ய வேண்டுமானால் அதற்க்கான சரியான தொழில்நுட்பமும் தேர்ந்தெடுக்க வேண்டும், அது சரியான பாதையில் கட்டமைத்து கொண்டு வரவே இவ்வளவு தாமதங்களுக்கும் காரணமாகும்.
11:57
Nov 15th
2024
R Stalin
Author
வணக்கம்!
தி ஜி.டி.ஐ பக்கத்திற்க்கு வருக வருக என அன்புடன் வரவேற்க்கிறேன்!
welcome to The GTI.
எனக்கு எப்போதும் வழிகாட்டும் நமது விநாயகரையும், முருகரையும், வணங்கி இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த புதிய தளம்?
கடந்த 8 வருடமாக ஃபேஸ்புக்கில் எனது பயணமானது ஒரு சராசரி தொடக்கமாக இருந்தது.
பின்பு முக்கிய நிகழ்வுகளும் அதன் தாக்கங்களையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் செய்திகள் கொண்டு சேர்க்க ஃபேஸ்புக் உதவியாக இருந்தது. பல கோடி மக்களுக்கும் எளிதாக இந்த தகவல்கள் சென்றடைந்தன, பகிர்ந்தோர் அத்தனை பேருக்கும் எனது உயிர் வணக்கங்கள்,எனது உயிர் வணக்கங்கள் 😎.
நாளடைவில் பல்வேறு மக்களுக்கும் இந்த செய்திகள், நுட்பங்கள், அறிவுப் பறிமாற்றங்கள் எவ்வளவு உதவியாக இருந்தது என்றும், எப்படி பயனுல்லதாக இருந்தென்று அவரவர்களுக்கு தெரியும்.
இந்த மிகப்பெரிய தகவல் தொடர்பை சமூக அமைப்பு சிறப்பாக கையாண்டது எனக்கு தனிப்பட்ட வகையில் மிக்க மகிழ்ச்சி.
சரியான பதிவுகளை சரியான நோக்கத்தோடு சரியான திட்டமிடலோடு சரியான செயல்பாட்டை நமது சமூக அமைப்பு செய்தது எனக்கு அளப்பறிய ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது.
மிகப்பெரிய வெற்றிகளை நாம் சமூக அமைப்பாக கடந்த 5 ஆண்டுகளாக சாதித்து கொண்டிருக்கிறோம்.
நமது செயல்பாடுகள் அடுத்த நிலைக்கு செல்ல ஃபேஸ்புக் தாண்டி இந்த தளம் தேவைப்படுகிறது. ஃபேஸ்புக் அடிப்படையாக செய்திகள் சிறிய அளவில் குறைந்த சுதந்திரத்தில் தான் வடிவமைக்க முடியும்,
மேலும் சில செய்திகளை சரியான அணுகுமுறைகள் கையாள வேண்டும் அதற்க்கு ஃபேஸ்புக் போதவில்லை. அதனால் தான் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது, இது மென்மேலும் மாற்றங்களடையும், புதிய அம்சங்கள் சேர்க்கப்படும்.
அதென்ன தி ஜி.டி.ஐ(The GTI)?
தி ஜி.டி.ஐ(The GTI) என்றால் பொது நுட்ப தகவல்கள் (The General Technical Information) என்று அர்த்தம். அரசியல், ஜோதிடம், கணிணி, இயந்திரம், வாகனம், வணிகம், தொழில் ஆகியவற்றை பற்றிய நுட்பமான செய்திகளையும், தரவுகளையும் நமது சமூக அமைப்பிற்க்கு பயன்படும் வகையில் பகிரப்படுவதால் இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பு பகுதியில் இருக்கும் படத்தின் சிறப்புகள் என்ன?
தலைப்பு பகுதி படமானது ஒரு சிங்கம் தனது கையில் ஒரு உருளையை வைத்து வெளிஉலகத்திற்க்கு காட்டுகிறது. இந்த சிங்கத்தின் சின்னமானது “மெடிச்சி லயன்” (Medici Lion) என்று அழைக்கப்படும்.
இத்தாலி ஃபுளோரன்ஸ் பகுதியில் வாழ்ந்த லோரென்ஸோ த மெடிச்சி என்பவர் அந்த பகுதியின் தலைவர், அவர் கொண்டு வந்த இந்த அலங்காரச் சிலை தான் “மெடிச்சி லயன்”.
அவருடைய பகுதிக்கு அவர் செய்த நன்மைகள் ஏறாளம், அவர் மக்களை அடுத்தக்கட்ட பரிணாமத்திற்க்கு கொண்டு செல்ல கலை, இலக்கியங்கள் இன்றியமையாதது என்று உணர்ந்து பல்வேறு கலைகளுக்கு உயிரூட்டினார், கலை வல்லுநர்களை போற்றி உதவிகள் செய்தார். “மைக்கலேஞ்சலோ, லியோனார்டோ டா வின்ச்சி, பாட்டிசெல்லி, மார்சிலியோ ஃபிச்சினோ” போன்ற உலக சரித்திரம் போற்றும் கலை வல்லுநர்களுக்கு அவர்கள் படைப்புகளுக்கு பேருதவி செய்தார்.
முக்கியமான சிலை வடிவமைப்புகள், புத்தகங்கள், ஓவியங்கள், கவிதைகள், மெடிச்சி ஆர்ட் கலெக்ஷன் என்ற கலை பொக்கிஷங்களாக சேகரித்தார்.
இவருடைய இந்த சிந்தனை மனிதகுலத்திற்க்கு மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னெடுப்புகளையும் செய்ய வைத்தது. இதன் காரணமாகவே அவருடைய சின்னமான “மெடிச்சி லயன்” இந்த தளத்தின் தலைப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் நோக்கமும், செயல்பாடுகளும் ஊரறிந்தது, 8 ஆண்டுகள் எப்படி ஃபேஸ்புக்கில் செயல்பாடுகள் இருந்ததோ அப்படியே இதிலும் இருக்கும். சமூக அமைப்பு இந்த தளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம், மீண்டும் வருக வருக என அன்புடன் வரவேற்க்கிறேன்!