சூர தேங்கா

கோவிலில் கடவுளிடம் வேண்டுதல் வைக்கிறோம் பெரியோர்கள் வேண்டுதல் நிறைவேற காணிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். தேங்காய் உடைக்கச் சொல்வார்கள், தீபம் ஏற்ற செயல்வார்கள், அபிஷேகம் செய்ய சொல்வார்கள்.

அதில் பிரதானமான “தேங்காய் உடைக்கும்” வழக்கத்தில் உள்ள சூட்சுமங்களை தெரிந்துகொண்டால், மற்ற வழிபாட்டு முறைகளின் சூட்சுமங்களின் அடிப்படையும் புரிந்துகொள்ளலாம்.

தேங்காயின் ஓடு செவ்வாய் தன்மையான உறுதியும், கரடு முரடான மேற்பரப்பையும், சுக்கிர தன்மையான இனிப்பு சுவைகொண்ட இளநீரையும் ஒருங்கே கொண்டதாகும். ஆக, ஆண், பெண் தனமைகள் ஒருங்கே இருப்பதனால் அங்கே ஒரு புதிய ஆற்றல் உண்டாகிறது.

எந்த ஒரு செயல் நடக்க வேண்டுமென்றாலும் அதற்க்கு ஆற்றல் தேவை, நமது கவலை தீரவும், வழிகாட்டவும் ஆற்றல் தேவை! நம் கடவுள் ஆற்றலிடம், நமக்கு வழிக்காட்டும்படியும், கவலைகளை தீர்க்கும்படியும் வேண்டுகிறோம். நமது வேண்டுதல் நிறைவேறுவதற்கு கடவுளின் ஆற்றல் பயன்படுத்துகிறோம், நமது தேவை நிறைவேறிய பின்பு அந்த ஆற்றலை திரும்பிச் செலுத்துவதே நேர்த்திக்கடன் என்று அழைக்கடப்படுகிறது.

நமது தேவை நிறைவேறியவுடன், தேங்காய் உடைப்பதன் மூலம் அதில் உள்ள ஆற்றலை கடவுளுக்கு மீண்டும் அற்ப்பணிக்கிறோம்.

இது தான் நாம் தேங்காய் உடைத்து வழிபடும் நோக்கம். மற்ற வழிப்பாட்டு நெறிகளும் இது தான் அடிப்படை.

நமது தேவைக்கான ஆற்றலை கடனாக கொடுத்த இறைவனிடம், மீண்டும் நன்றியுடன் திருப்பி அளிப்பதே நேர்த்திக்கடன்.