யோகோட்சுனா



ஓசுமோவில் 6 டிவிஷன்கள், மொத்தமாக கணக்கெடுத்தால் 6000 ரிக்கிஷீகள் இருப்பார்கள். தொடக்க நிலையிலிருந்து, படிப்படியாக தகுதிகளை வளர்த்துக்கொண்டு படிநிலை ஏறுவார்கள்.

அந்த 6000 ரிக்கிஷீக்களுக்கும் தலைமையாக இருப்பவர் யோகோசுனா ஆவார். உயர்ந்த யோகோசுனா நிலையை அடைந்தவர் தான் ஓசுமோவின் முகமாக இருப்பார். மக்களிடமும், தனது ரிக்கிஷீக்களுக்கும், ஓசுமோவின் நிலைப்பாடு, நடத்தை, பண்புகள், நடைமுறைகள், பாரம்பரியத்தை போற்றி அதன் மாண்பை காப்பாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு யோகோசுனாவிடம் தான் உள்ளது.

2000 வருட ஓசுமோ வரலாற்றில் வெறும் 73 பேர் மட்டுமே யோகோசுனாவாக உயர்ந்தார்கள். பல்லாயிரம் பேரில் வெறும் 73 பேர் தான் யோகோசுனாவாக தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அந்த உயர்ந்த படிநிலையை எட்டினார்கள்.

Rikishi

மேகாஸீரா, கொமுசுபி, செக்கிவாகே, ஓசெகி மற்றும் பின்னர் உச்சம் யோகோசுனா ஆகிய தரவரிசை முறையில் உயர்ந்து வருகிறார்கள்.


Makunochi Division



யோகோட்சுனா

சுமோ விளையாட்டில் யோகோசுனா என்பது மல்யுத்த வீரர் (ரிகிஷி) பெறக்கூடிய மிக உயர்ந்த பதவியாகும். இந்த வார்த்தைக்கு “கிடைமட்ட கயிறு” என்று பொருள், மேலும் இது யோகோசுனா அணியும் சின்னங்களில் ஒன்றிலிருந்து வருகிறது; இடுப்பில் அணியும் ஒரு தடிமனான கயிறு. இது அவர்களின் அந்தஸ்தின் அடையாளமாகும்.

யோகோஸுனா ஹக்குஹோ ஷோ

கிடைமட்ட அகலமான கயிறு தான் யோகோசுனாவின் அடையாளமாகும்.

யோகோசுனா கயிற்றின் வடிவத்தை நாம் கவனிக்கும்போது, ​​அது கேதுவின் வடிவம் என்பதை நாம் காணலாம்.

கிடைமட்ட அகலமான கயிறு யோகோஸுனா கயிற்றை கவனிக்கவும் யோகோசுனா கயிற்றின் வடிவம் கேது

டொஹியோவை சுத்தம் செய்து, துர்சக்திகளை வெளியேற்றுதல்.

நான் ஏற்கனவே பகிர்ந்ததுபோல், 12ம் இடத்து ரேவதி நட்சத்திர பொருளான மேளத்தை இசைத்து, துஷ்ட்ட சக்திகளை களத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறது.



ரேவதி நட்சத்திர குடுகுடுப்பையோ, தப்பட்டையோ வாசித்தால் வீட்டை விட்டு தன்னார்வமாக வெளியே வருவார்கள்

டொஹியோ ஈரீ

பிறகு போட்டி நாட்களில் யோகொட்சுனா அவர்கள் களத்திற்கு வருவார், பின்பு நாம் எப்படி தீப ஆராதனை சடங்கு செய்கிறோமோ அவரும் டொஹியோ ஈரீ என்னும் சடங்கை செய்வார். ஒரு ரிகிஷி யோகொட்சுனா தலைமைக்கு வரும்போது அவருக்கு கிடைமட்ட கயிறு அணிவிக்கப்படுகிறது.

அந்த கயிற்றை அணிந்த பின்பு, அவரது உடலில் நேர்மறை இறை சக்தி இறங்கி அந்த களத்தை ஆசிர்வதித்திக்கிறது. யோகொட்ச்சுனா செய்வதும் ரெய்கி போன்றது தான். கிடைமட்ட கயிறானது கேதுவின் வடிவத்தை போன்று உள்ளதை நாம் காணலாம். மூலாதார சக்கரத்திற்கு மேல் இந்த கேது வடிவ கயிற்றை கட்டி, நேர்மறை இறை சக்தியை ரிகிஷியின் உடலுக்குள் வரச் செய்து, ரெய்கி சடங்கை செய்வது தான் டொஹியோ ஈரீ.

சடங்கு செய்யும்போது யோகொட்சுனா பின்னால் இருக்கும் சுமோ போட்டி நடுவர் “கியோஜி” செய்வதை பாருங்கள்.