மேக்னெட்டோ என்செபலோ கிராபி




மேக்னெட்டோ என்செபலோ கிராபி

மனித மூளையில் மின்சாரம் பாய்கிறது, இது பல்வேறு உறுப்புகளிலிருந்து முக்கிய தகவல்களைப் பெறுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பாகும்.

இந்த மின்சார ஓட்டம் அதைச் சுற்றியுள்ள காந்தப்புலங்களை ஏற்படுத்துகிறது. இந்த காந்தப்புலங்களை அளவிடுவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை நாம் வரைபடமாக்கலாம்.

இது மேக்னெட்டோ என்செபலோ கிராபி Magnetoencephalography என்று அழைக்கப்படுகிறது.

நமது மூளை மின்சார மற்றும் காந்தப்புலங்களை உருவாக்குகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இதேபோல், மின்சார மற்றும் காந்தப்புலங்களை உருவாக்கும் பிற உறுப்புகள் அல்லது மனித உடல் அமைப்புகள் உள்ளன.

  1. இருதய அமைப்பு (இதயம்)
  2. செரிமான அமைப்பு (குடல்)
  3. ஹார்மோன் அமைப்பு (பிட்யூட்டரி, தைராய்டு, கணையம்)
  4. இனப்பெருக்க அமைப்பு (ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகள்)
  5. சுவாச அமைப்பு
  6. நரம்பு மண்டலம் (மூளை, நரம்புகள், முதுகெலும்பு)

இந்த அமைப்புகள் மின் சமிக்ஞைகளை உருவாக்கி பெறுகின்றன, இதன் மூலம் அவற்றைச் சுற்றி காந்தப்புலங்களை உருவாக்குகின்றன.

இந்த மின் காந்தப்புலங்கள் மற்றும் அவைகளை உருவாக்கும் அமைப்புகள் தியான உலகில் சக்கரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

7 சக்கரங்கள்

மூலாதாரம் (Muladhara): (இனப்பெருக்க அமைப்பு மின்காந்த புலம்)
சுவாதிஷ்டானம் (Swadhisthana): (செரிமான அமைப்பு மின்காந்த புலம்)
மணிப்பூரகம் (Manipura): (ஹார்மோன் அமைப்பு மின்காந்த புலம்)
அனாகதம் (Anahata): ( இருதய அமைப்பு மின்காந்த புலம்)
விசுத்தி (Vishuddha):(தைராய்டு + சுவாச அமைப்பு, மின்காந்த புலம்)
ஆக்கினை (Ajna): (பீனியல் சுரப்பி மின்காந்த புலம்)
சஹஸ்ராரம் (Sahasrara): (மூளை உச்சந்தலை மின்காந்த புலம்)

குண்டலினி என்பது உடலில் உறங்கிக் கிடக்கும் ஒரு சக்தி வாய்ந்த உயிர் ஆற்றலாகும், இது நாகம் போல வளைந்திருக்கும் தன்மையால் இப்பெயர் பெற்றுள்ளது. மூலாதாரம் என்னும் தண்டுவடத்தின் அடிப்பகுதியில் இந்த சக்தி அமைந்துள்ளது.

குண்டலினி தீப ஆராதனை Reiki

நாம் தீப ஆராதனை செய்வது ஒருவகை குண்டலினி ஆற்றலை தூண்டும் செயலே.